Enable Javscript for better performance
தொடக்கப் பள்ளி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தொடக்கப் பள்ளி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

    By திருவாரூர்  |   Published on : 17th June 2014 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) தொடங்குகிறது.

    இதுகுறித்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கு. மாந்தரையன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    திருவாரூர் மாவட்ட தொடக்கக் கல்வித் துறையில் மாவட்டத் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டிலுள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கான 2014-15 கல்வியா ண்டுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு திருவாரூர் வடக்குவீதி ஆர்.சி.பாத்திமா நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஜூன் 28-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

    ஜூன் 17: காலை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு, மாலை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு.

    ஜூன் 18: காலை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு, மாலை பட்டதாரி ஆசிரியர் ஒன்றியத்திற்குள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு.

    ஜூன் 19: பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) ஜூன் 21: பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு.

    ஜூன் 23: காலை தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு, மாலை தொடக்கப் பள்ளி தலைமையாசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு. ஜூன் 24: இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு. ஜூன் 25: இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு.

    ஜூன் 26: இடைநிலை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) ஜூலை 28: இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்  கலந்தாய்வு.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai