Enable Javscript for better performance
ரூ. 3.27 லட்சத்தில் நலத் திட்ட உதவி அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் ரூ. 3.27 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    ஆட்சியரகத்தில் ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 302 பேர் மனு அளித்தனர்.

    அப்போது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில், 15 பெண்களுக்கு தலா ரூ. 3,465 மதிப்பிலான தையல் இயந்திரம், ஆதிதிராடவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் 14 பெண்களுக்கு தலா ரூ. 3,600 மதிப்பில் தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் 19 மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் ரூ. 2,25,000 மதிப்பிலான செயற்கை கால்கள், 26 பேருக்கு புதிய குடும்ப அட்டை என மொத்தம் 74 பேருக்கு ரூ. 3,27,975 மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் விஜயலெட்சுமி, துணை ஆட்சியர்கள் (பயிற்சி) எ.ஜி. ராஜராஜன், எஸ். ஜானகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai