சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் மாதக் கட்டணத்தை செலுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜெ. குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டிவி சேவையை முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ரூ. 70 கட்டணத்தில் வழங்கி வருகிறார்.

  தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு செய்துள்ள உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் (எல்சிஓ) மற்றும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் (பிஎல்சி) அந்தந்த மாதத்திற்குரிய கட்டணத்தை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு அடுத்த மாதத்தின் 20-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் 21-ம் தேதி முதல் அந்தந்த மாதத்திற்கான நிலுவைத் தொகையின் பேரில் மாதத்துக்கு 1 சதவீதம் என்ற அடிப்படையில் நிலுவையில் உள்ள நாள்களை கணக்கிட்டு அபராத தொகை வசூலிக்கப்படும். எனவே, மாத கட்டணத்தை குறிப்பிட்டுள்ள கால வரையறைக்குள் தவறாமல் செலுத்த வேண்டும்.

  நாகை: இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் மற்றும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் தங்களுடைய மாதக் கட்டணத்தை, அடுத்த மாதத்தின் 20-ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் என கடந்த மே 20-ம் தேதி நடைபெற்ற அரசு கேபிள் டிவி நிறுவன இயக்குநர் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

  எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மற்றும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் அந்தந்த மாதத்துக்குரிய கட்டணத் தொகையை, அடுத்த மாதத்தின் 20-ம் தேதிக்குள் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

  இந்த அறிவுறுத்தலை கடைப்பிடிக்காதவர்களுக்கு மாதம் 21-ம் தேதி முதல் அந்தந்த மாதத்துக்கான நிலுவைத் தொகையின் பேரில், மாதம் ஒன்றுக்கு ஒரு சதவீதம் என்ற அடிப்படையில் அபராதத் தொகை கணக்கிட்டு வசூலிக்கப்படும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai