சுடச்சுட

  

  குடவாசலில் திமுக பிரமுகர் மீது செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த தாக்குதல் தொடர்பாக காவல் துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.

  திருவாரூர் மாவட்டம், குடவாசல் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் என்ற சுந்தர் (39), குடவாசல் திமுக நகரச் செயலராக உள்ளார். இவர் தனது சகோதரி மகன் சிலம்பரசன் (29) என்பவருடன் குடவாசல் கடைவீதியில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கே.பி.ஆர். செந்தில் உள்ளிட்ட சிலர் சுந்தர், சிலம்பரசன் ஆகியோரை தாக்கினராம். இதில் காயமடைந்த சுந்தர் குடவாசல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்குப்பட்டுள்ளார்.

  தகவல் அறிந்து அங்கு சென்ற குடவாசல் போலீஸார் கே.பி.ஆர். செந்தில், வெங்கடேசன், விஜய் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai