சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டத்தில் குறுவையை ஊக்குவிக்க ரூ. 9.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  மாவட்டத்தில் காவிரிநீர் வரும்போது வாய்க்கால் பாசனம் மூலம் 17,000 ஹெக்டேர், நிலத்தடி நீரைக்கொண்டு 19,000 ஹெக்டேர் என மொத்தம் 36,000 ஹெக்டேரில் நிகழாண்டு குறுவை நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

  முதல்வர் அறிவித்துள்ள குறுவை சாகுபடி சிறப்புத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் விவசாய குழுக்களுக்கு வழங்க ரூ. 1 கோடியில் 50 நெல் நடவு இயந்திரங்கள், ரூ. 15 லட்சத்தில் 50 களை எடுக்கும் கருவிகள், நீர் ஆதாரங்களிலிருந்து வயலுக்கு பாசன நீரை வீணாகாமல் கொண்டு செல்ல 600 அடி நீளமுள்ள 2,100 அலகு பிவிசி குழாய்களுக்கு ரூ. 4.20 கோடி.

  170 ஹெக்டேர் பரப்பில் முன்கூட்டியே சமுதாய நாற்றங்கால் அமைத்து, காவிரி நீர் வரும்போது நிலத்தடிநீர் பாசன வசதி இல்லாத 17,000 ஹெக்டேரில் நடவுசெய்ய 100% மானியத்தில் நாற்றுகள் வழங்க ரூ. 1.06 கோடி, 14,000 ஹெக்டேர் பரப்பிற்கு சிங்க் சல்பேட்டுக்கு ரூ. 1.22 கோடி.

  14,000 ஹெக்டேர் பரப்பிற்கு நுண்சத்துக்கு ரூ. 50.75 லட்சம், 6,800 ஹெக்டேர் பரப்பிற்கு ஜிப்சம் இட ரூ. 1.19 கோடி, 4,800 ஹெக்டேர் பரப்பிற்கு உயிர் உரங்கள் இட ரூ. 6 லட்சம், 4,800 ஹெக்டேர் பரப்பிற்கு திரவ உயிர் உரங்கள் இட ரூ. 28.8 லட்சம் என மொத்தம் ரூ. 9.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  எனவே, திருவாரூர் மாவட்ட குறுவை விவசாயிகள் அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளையும் பயன்படுத்தி, உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களை செயல்படுத்தி அதிக மகசூல் பெற

  வேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai