சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா பள்ளியில் சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை சார்பில் வரும் 22-ம் தேதி நெல் திருவிழா நடைபெறவுள்ளது.

  கிராமப்புற விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறவுள்ள இந்த நெல் திருவிழாவில் பழந்தமிழ் நெல் வகை மற்றும் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

  திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தனசேகரன், நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் ரவிசங்கர், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் சோழன் மற்றும் விவசாய அமைப்பு நிர்வாகிகள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்கவுள்ளனர்.

  எனவே, அனைத்து விவசாயிகளும், ஆர்வலர்களும் நெல் திருவிழாவில் பங்கேற்று பயன்பெறலாம் என அறக்கட்டளை அறங்காவலர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai