சுடச்சுட

  

  மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் நிகழாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூன் 19) தொடங்குகிறது என முதல்வர் அ. ஜான்மெரினா தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் 2014-2015-ம் ஆண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு வியாழக்கிழமை முதல் நடைபெறவுள்ளது. 19-ம் தேதி மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த அனைவரும் பங்கேற்கலாம். 20-ம் தேதி இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், கணிப்பொறியியல், நுண்ணுயிரியல் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த 800-க்கு 500-க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

  24-ம் தேதி வணிகவியல், வணிக மேலாண்மை, வரலாறு ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த 800-க்கு 500-க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள், தொழிற்கல்வி பிரிவாக இருந்தால் 800-க்கு 650-க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

  25-ம் தேதி தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்தவர்களும், 26-ம் தேதி இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், கணிப்பொறியியல், நுண்ணுயிரியல் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த 800-க்கு 300-க்கு மேல் 499 வரை மதிப்பெண் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

  27-ம் தேதி வணிகவியல், வணிக மேலாண்மை, வரலாறு ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த 800-க்கு 300-க்கு மேல் 499 வரை மதிப்பெண் பெற்றவர்களும், தொழிற்கல்வி பிரிவாக இருந்தால் 800-க்கு 400 முதல் 649 வரை மதிப்பெண் பெற்றவர்களும் பங்கேற்கலாம்.

  விண்ணப்பித்த எஸ்டி மாணவர்கள் பெற்ற மதிப்பெண் எதுவாக இருந்தாலும் விண்ணப்பித்த பாடத்திற்குரிய கலந்தாய்வுகளில் பங்கேற்கலாம். கலந்தாய்விற்கு வரும் மாணவ, மாணவிகள் காலை 10 மணிக்கு முன்னதாக கல்லூரிக்கு வந்துவிட வேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai