சுடச்சுட

  

  ஸ்டேட் பாங்க் எழுத்தர் பணி தேர்வுக்கு எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது.

  இதுகுறித்து காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்டத் தலைவர் இரா. புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளது:

  டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஸ்டேட் பாங்க் எழுத்தர் பணிக்கான தேர்வுக்கு கட்டணமில்லா சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

  வகுப்புகள் வரும் 21-ம் தேதி முதல் தஞ்சையில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தால் நடத்தப்படவுள்ளது. எழுத்தர் பணி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தஞ்சை கோட்ட அலுவலகத்தில் நடைபெறவுள்ள இலவச வகுப்பில் பங்கேற்று பயனடையலாம்.

  பயிற்சி வகுப்பில் பங்கேற்பவர்களுக்கு ஜூன் 16 முதல் பதிவு நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து மேலும் விவரம் பெற பி. சரவணபாஸ்கர் (94421 18305), ரா. புண்ணியமூர்த்தி (94438 87479), சே. செல்வராஜ் (94438 87479) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai