சுடச்சுட

    

    ஆசிரியர்கள் அச்சுறுத்தல்: ஆட்சியரிடம் மாணவிகள் புகார்

    By காரைக்கால்,  |   Published on : 19th June 2014 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ் 1 இறுதித் தேர்வை மறுமுறை எழுதியும், தோல்வியடைவது உறுதி என ஆசிரியர்கள் அச்சுறுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்தனர்.

    கடந்த 2013-14-ம் ஆண்டு பிளஸ் 1 இறுதித் தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில் ஏராளமான மாணவ, மாணவிகள் தோல்வியடைந்தனர். அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சியை காட்டும் வகையில், சராசரியாக படிக்கும் மாணவிகளை தோல்வியுறச் செய்வதாக மாணவ, மாணவிகள் புகார் தெரிவித்தனர். இதை கருத்தில்கொண்ட புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர், புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 1-ல் தோல்வியடைந்தவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிட்டார்.

    இதன்படி பிளஸ் 1-ல் தோல்வியுற்ற மாணவ, மாணவிகள் அண்மையில் தேர்வு எழுதினர். இந்த நிலையில், காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து மறு தேர்வு எழுதிய சில மாணவிகள் மாவட்ட ஆட்சியர் லெ. முகம்மது மன்சூரை செவ்வாய்க்கிழமை சந்தித்து புகார் அளித்தனர். சந்திப்புக்குப் பிறகு மாணவிகள் கூறியது:

    பள்ளியில் நாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ சில தவறுகள் செய்திருக்கலாம். இதை சில ஆசிரியர்கள் மனதில்கொண்டு பிளஸ் 1 தேர்வில் அவர்களது பாடத்தில் குறைந்த மதிப்பெண் போட்டு தோல்வியடையச் செய்துவிட்டனர். மீண்டும் அரசின் நடவடிக்கையால் மறு தேர்வு எழுதியுள்ளோம். இப்போதும் அந்த அசிரியர்கள், நீங்கள் வெற்றிபெறுவது கடினம் என்று எங்களை அச்சுறுத்துகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்னையில் தலையிட வேண்டும் என்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai