சுடச்சுட

  

  "குறுவை சிறப்புத் திட்டத்தில் பயன்பெறுவோர் புதியவர்களாக இருக்க வேண்டும்'

  By திருவாரூர்  |   Published on : 19th June 2014 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குறுவை சாகுபடி சிறப்புத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் புதியவர்களாக இருக்கும் வகையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றார் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலர் சந்தீப் சக்சேனா.

  திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை, திருவாரூர் ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெற்ற, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

  தமிழகத்தில் குறுவை சாகுபடி மேற்கொள்ள 12 மணி நேரம் மும்முனை மின்சாரம், 100% மானியத்தில் பிவிசி குழாய்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

  திருவாரூர் மாவட்டத்தில் 36,000 ஹெக்டேர், நாகையில் 35,000 ஹெக்டேர், கடலூரில் 35,000 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 100% மானியத்தில் பிவிசி குழாய், சமுதாய நாற்றாங்கால், களையெடுக்கும் கருவி உள்ளிட்டவை வழங்க திருவாரூருக்கு ரூ. 9.68 கோடி, நாகைக்கு ரூ. 8.84 கோடி, கடலூருக்கு ரூ. 2.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 2,201 ஹெக்டேரிலும், நாகையில் 10,809 ஹெக்டேரிலும், கடலூரில் 2,887 ஹெக்டேரிலும் குறுவை பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 7,610 ஹெக்டேரிலும், நாகையில் 18,210 ஹெக்டேரிலும், கடலூரில் 6,840 ஹெக்டேரிலும் நாற்று தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

  வேளாண் அலுவலர்கள் குறுவை சிறப்புத் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் புதியவர்களாக இருக்கும் வகையில் தேர்வு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு சிறப்புத் திட்டத்தில் பயன்பெற்றவர்களை மீண்டும் தேர்வு செய்யக் கூடாது என்றார் சந்தீப் சக்சேனா.

  கூட்டத்தில் வேளாண் இயக்குநர் மு. ராசேந்திரன், திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், வேளாண்மை பொறியியில் துறை முதன்மை பொறியாளர் செந்தில் மற்றும் திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai