சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே பெண் தீக்குளித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

    குடவாசல் அருகேயுள்ள செல்லூரைச் சேர்ந்தவர் சேகர் மனைவி சித்ரா (30). தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபோல திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சித்ரா மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

    இதில் பலத்த காயமடைந்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    மற்றொருவர் சாவு: குடவாசல் அருகே மயிலாடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35). விவசாயக் கூலியான இவர் குடும்பப் பிரச்னை காரணமாக திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். பின்னர் குடும்பத்தினர் அவரை காப்பாற்றி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். மேற்கண்ட இரு சம்பவங்கள் குறித்தும் குடவாசல் போலீஸார் விசாரிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai