சுடச்சுட

  

  காரைக்காலில் நடைபெறும் என்.சி.சி. முகாமில் மாணவர்களிடையே அணிவகுப்பு போட்டி நடத்தப்பட்டு, சிறப்பு அணிவகுப்புக்கான உத்திகள் தெரிவிக்கப்பட்டது.

  காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் காரைக்கால், மாஹே பிராந்திய மாணவர்கள் பங்கேற்ற 10 நாள் என்.சி.சி. முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் இரு பிராந்தியங்களில் இருந்து 10 பள்ளிகள், 2 கல்லூரிகளில் இருந்து சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். முகாம் நாள்களில் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பேரணி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் ஒருகட்டமாக ஒவ்வொரு பள்ளி என்.சி.சி. மாணவர்களிடையே அணிவகுப்புத் திறனை சோதிக்கும் போட்டி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

  முகாம் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஜெத்ரி முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில், மாணவர்கள் அணிவகுத்துச் சென்றனர். இதில் மாணவர்களின் நடை, உடை, மிடுக்கான தோற்றம் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டது. இதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, மாணவர்கள் மற்றும் அப்பள்ளி என்.சி.சி ஆசிரியர்களுக்கு ராணுவ பயிற்றுநர்கள் மேம்பாட்டுக்கான உத்திகளை விளக்கினர்.

  சிறந்த அணிவகுப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினருக்கு முகாம் நிறைவின்போது பரிசுகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai