Enable Javscript for better performance
சாலை விபத்தில் காயமடைந்த வங்கி பெண் ஊழியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சாலை விபத்தில் காயமடைந்த வங்கி பெண் ஊழியர் சாவு

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 20th June 2014 04:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்துப்பேட்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வங்கி பெண் ஊழியர் அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தார்.

    முத்துப்பேட்டை - மன்னார்குடி சாலையில வசித்து வருபவர் கருணாநிதி. இவர் ஊரக வளர்ச்சித் துறையில் தணிக்கையாளராகப் பணியாற்றி வருகிறார்.

    இவரது மகள் ராஜகுமாரி (24). திருத்துறைப்பூண்டி சன்னதித் தெருவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்து வந்தார்.

    இவர் செவ்வாய்க்கிழமை வங்கிப் பணியை முடித்துக்கண்டு முத்துப்பேட்டையில் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்கி மன்னார்குடி சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ராஜகுமாரி பலத்த காயமடைந்தார். இதையடுத்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகுமாரி, அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தார்.

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த ராஜகுமாரியின் உடலுக்கு வங்கியின் முதன்மை மேலாளர் புகழேந்தி, மேலாளர் டி. இளங்கோவன் உள்ளிட்ட வங்கி ஊழியர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai