சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில்இன்று "அம்மா' திட்ட முகாம்கள்

    By திருவாரூர்,  |   Published on : 20th June 2014 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் வட்டம் சுந்தரவிளாகம், கிடாரங்கொண்டான், நன்னிலம் வட்டம் சிறுபுளியூர், குடவாசல் வட்டம் திருப்பாம்புரம், வலங்கைமான் வட்டம் மதகரம், நீடாமங்கலம் வட்டம் ராமநாதன்கோவில், மன்னார்குடி வட்டம் அரவத்தூர், திருத்துறைப்பூண்டி வட்டம் விளத்தூர் ஆகிய கிராமங்களில் "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. எனவே, பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்துப் பயன்பெறலாம்.

    ரூ. 3.13 லட்சம் நலத் திட்ட உதவிகள் வழங்கல்திருவாரூர், ஜூன் 19: திருவாரூர் மாவட்டம், குடவாசலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளில் 203 பேருக்கு ரூ. 3.13 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் எம். மதிவாணன் வழங்கினார்.

    குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடவாசல் வட்டத்துக்கான ஐமாபந்தியின் இறுதி நாளான வியாழக்கிழமை விடயபபுரம், கண்கொடுத்தவணிதம், மேல ராதாநல்லூர், எருக்காட்டூர், பருத்தியூர், தியாகராஜபுரம், கமலாபுரம், குளிக்கரை, பெருந் தரக்குடி, தேவர்கண்டநல்லூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது, 37 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை, 9 பேருக்கு பட்டா உட்பிரிவு மாறுதல் ஆணை, ஒருவருக்கு சிட்டா அடங்கல் நகல், 7 நலிந்த கலைஞர்களுக்கு தலா ரூ. 12,000 -க்கான காசோலை, 5 பேருக்கு நலிந்தோர் நலத் திட்டத்தின் கீழ் தலா ரூ.10,000 -க்கான காசோலை, 120 மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 1,79,650 -க்கான காசோலை, 22 பேருக்கு புதிய குடும்ப அட்டை என 203 பயனாளிகளுக்கு ரூ. 3,13,650 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். குடவாசல் ஜமாபந்தியில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 705 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதில் 107 மனுதாரர்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 472 மனுக் கள் நிராகரிக்கப்பட்டன. 126 மனுக்கள் அலுவலர்களால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

    நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அசோகன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) விஜயலட்சுமி, வட்டாட்சியர் ராஜாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai