சுடச்சுட

    

    போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    By திருவாரூர்  |   Published on : 20th June 2014 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    உயர்கல்வி பெற பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில், அனைத்து சமுதாய மாணவர்களைக் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்களும் உயர்கல்வி பெற தமிழக அரசு எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகளில் படிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

    திட்டத்தின்கீழ் பயன்பெறும் மாணவர்களின் குடும்ப மற்றும் பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள்ளும், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் உள்பட கட்டாயம் திருப்பிச் செலு த்தப்படாத கட்டணங்கள் அரசால் கல்லூரிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. மேலும், இக் கல்லூரிகளில் பயிலும் தகுதியுள்ள மாணவர்களுக்கு பராமரிப்புப்படி தனியே மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    தொடர்புடைய அனைத்து கல்லூரிகளும் மாணவர்களிடமிருந்து தேவையான விவரங்களை பெற்று இணைய தளத்தின் (ஜ்ஜ்ஜ்.ங்ள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) மூலம் விண்ணப்பித்து மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செலுத்த வேண்டிய கல்வி கட்டணங்களை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai