சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை அனுமதியின்றி மது பானம் விற்ற 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸார் சாராய சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது பூவனூரில் ஜோசப் நெப்போலியன் (36), மன்னார்குடி ரயில் நிலையம் அருகே விஸ்வநாதன் (52), மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலையில் சேகர் (45), சாத்தங்குடி மதுபான கடை அருகே சோமசுந்தரம் (45), கீரக்கனூரில் கிரண்குமார் (23), ராஜாகொத்தமங்கலத்தில் தேவதாஸ் (40). பழைய தஞ்சாவூர் சாலையில் ரெங்கராஜன் (33), திருவாரூர் வேன் நிறுத்தம் பகுதியில் ரமேஷ் (35), கந்தங்குடி சோதனைச் சாவடி அருகே ஆறுமுகம் (24), குருங்குளம் மணிகண்டன் (34) ஆகியோர் அனுமதியின்றி மதுபானம் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அனைவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai