சுடச்சுட

  

  ஆதிதிராவிடர் பள்ளி, விடுதிகளில் அமைச்சர் ஆய்வு

  By திருவாரூர்  |   Published on : 21st June 2014 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் விடுதிகளில் வெள்ளிக்கிழமை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

  மன்னார்குடி ஆதிதிராவிடர் பள்ளி பெண்கள் விடுதி சமையலறை, மாணவிகள் தங்கும் அறை மற்றும் கழிவறைகளை பார்வையிட்டு சுத்தமாக பராமரிக்க விடுதிக் காப்பாளரிடம் அறிவுறுத்தினார். தவிர தண்ணீர் குழாய் சரியாக செயல்படுகிறதா என்றும், விடுதியில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்றும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

  அடுத்து, திருத்துறைப்பூண்டி வட்டம் அபிஷேக கட்டளை ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை கேட்டறிந்தார்கள். மேலும் பள்ளியில் நடைபெற்று வரும் கட்டடம் பழுது பார்க்கும் பணிகளை விரைவில் மேற்கொள்ளுமாறு தாட்கோ செயற்பொறியாளரிடம் (கட்டடம்) அறிவுருத்தினர்.

  பள்ளியில் ரூ. 2.60 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சத்துணவு கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  அடுத்து, திருவாரூர் ஜந்நூற்று பிள்ளையார் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதி, நெடுங்குளம் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி, அரசு ஆதிதிராவிட மாணவியர் விடுதி, நெடுங்குளம் அரசு ஆதிதிராவிட தொடக்கப்பள்ளி, நன்னிலம் அரசு ஆதிதிராவிட மாணவியர் விடுதி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  ஆய்வின்போது, உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai