சுடச்சுட

    

    போலி கையெழுத்திட்ட சான்றிதழ் அளித்து வங்கிப் பணியில் சேர்ந்ததாக புகார்

    By காரைக்கால்,  |   Published on : 21st June 2014 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வட்டாட்சியரின் கையெழுத்தை போலியாக இட்டு வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழை அளித்து வங்கிப் பணியில் சேர்ந்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநள்ளாறு பகுதி பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காரைக்கால் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பகுதி நேர துப்புரவுப் பணிக்கு சேர்ந்தார். அவர் வங்கி நிர்வாகத்திற்கு அளித்த கல்வி மற்றும் ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவை திருநள்ளாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டபோது, அந்தப் பெண் அளித்த ஜாதி சான்றிதழில் வட்டாட்சியர் கையெழுத்து போலியாக இருப்பதை வட்டாட்சியர் ராஜகோபால் உறுதி செய்தார். மேலும் இதுகுறித்து அவர் திருநள்ளாறு காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார்.

    போலீஸார், திருள்ளாறு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று அங்கு பணியாற்றுவோரிடம் விசாரணை நடத்தினர்.

    கிராம உதவியாளராக பணியாற்றும் அன்பரசன் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, இதில் சிலருக்கு தொடர்பு உள்ளதாக அவர் கூறியதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    திருநள்ளாறு போலீஸார் அன்பரசனை காவல்நிலையம் அழைத்துச் சென்று சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழுக்கு பயன்படுத்தப்பட்ட சீல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, வங்கிப் பணியில் சேர்ந்த பெண், போலியாக ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு உடந்தையாக இருந்த நபர்கள், வருவாய்த் துறையில் போலியாக கையெழுத்து போட்ட நபர் யார், இதில் வேறு யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai