சுடச்சுட

  

  மாற்றுத்திறனாளிகளுக்குதையல் இயந்திரம்:ஜூன் 26-ல் நேர்முக தேர்வு

  By திருவாரூர்,  |   Published on : 21st June 2014 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்க ஜூன் 26-ல் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. தகுதியானவர்களுக்கான தேர்வு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூன் 26-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இயந்திரம் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் இதுவரை தையல் இயந்திரம் பெறாதவராகவும், 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்குள்பட்டவராக இருப்பதுடன், ஏற்கெனவே தையல் பயிற்சி பெற்றவராக, செவித்திறன் கால்கள் பாதிக்கப்பட்ட மற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும்.

  தங்கள் விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் ஜூன் 24-ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகம், திருவாரூர் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai