இளைஞர் தற்கொலை
By திருவாரூர், | Published on : 22nd June 2014 02:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் அருகே காதலி உயிரிழந்த சோகத்தில் மனமுடைந்த காதலன் பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் அருகே அலிவலம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சேரன் மன்னன் (23). இவர் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அப்பெண் அண்மையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். இதில் மனமுடைந்த சேரன் மன்னன் புதன்கிழமை (ஜூன்-18) விஷம் குடித்ததார். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீக்காயமடைந்த
பெண் சாவு திருவாரூர், ஜூன் 21: கூத்தாநல்லூர் அருகே தீக்காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிந்தார்.
திருவாரூர் மாவட்ம், கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடியைச் சேர்ந்தவர் ஜெயப் பிரகாஷ் மனைவி சுகந்தி (30). திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் சமையல் செய்யும்போது சுகந்தி தீக்காயமடைந்தார்.
இதையடுத்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கூத்தாநல்லூர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.