Enable Javscript for better performance
திருநள்ளாறு கோயில் யானைக்கு விரைவில் நெற்றிப்பட்டம் - Dinamani

சுடச்சுட

    

    திருநள்ளாறு கோயில் யானைக்கு விரைவில் நெற்றிப்பட்டம்

    By காரைக்கால்,  |   Published on : 22nd June 2014 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநள்ளாறு கோயில் யானைக்கென திருச்சூரில் தயார் செய்த நெற்றிப்பட்டம் சனிக்கிழமை வந்து சேர்ந்தது. அடுத்த சில நாள்களில் யானைக்கு பொருத்தப்படுமென கோயில் அதிகாரி தெரிவித்தார்.

    யானைகளின் நெற்றியை அலங்கரிக்கும் வகையில் வண்ண குமிழ்களால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டம் மாட்டப்படுவது வழக்கம். இது பெரும்பான்மையாக பல்வேறு மாநில கோயில் யானைகளுக்கு தயார் செய்து பயன்பாட்டில் இருந்துவருகிறது.

    திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் யானைக்கு நெற்றிப்பட்டம் என்பது இல்லை. பக்தர்களின் நன்கொடையின் மூலம் கோயில் நிர்வாகம் கோயில் யானை பிரக்ருதிக்கு நெற்றிப்பட்டம் தயார் செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. கேரள மாநிலம் திருச்சூரில் தயார் செய்யப்பட்ட நெற்றிப்பட்டம் சனிக்கிழமை திருநள்ளாறு வந்து சேர்ந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாக அலுவலர் ஏ. ராஜராஜன்வீராசாமி சனிக்கிழமை கூறியது: பிரக்ருதி யானைக்கு புதிதாக நெற்றிப்பட்டம் செய்யப்பட்டுள்ளது. 15 கிலோ எடையில் ரூ. 80 ஆயிரம் செலவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. தங்க நிறத்தில் குமிழ்கள் பல அமைத்து அழகிய வடிவில் செய்யப்பட்டுள்ளது. இது 25-ம் தேதி அன்று சிறப்பு பூஜை செய்து யானைக்கு பொருத்தப்படவுள்ளது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai