Enable Javscript for better performance
நகை பறித்த இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் வியாழக்கிழமை நள்ளிரவு பெண்ணின் கழுத்தை அறுத்து நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    திருவாரூர் காந்தி சாலையைச் சேர்ந்தவர் ராதிகா (35). கீழ்வேளூரில் தனியார் கல்வி நிறுவன உதவியாளரான இவரிடம் வியாழக்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 8 அரை தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பினார்.

    இதுகுறித்து திருவாரூர் நகரக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசார ணை மேற்கொண்டனர். விசாரணையில், நகையை பறித்துச் சென்றதாகக் கூறப்படும் வேளாங்கண்ணி அண்ணப்பிள்ளை தெருவைச் சேர்ந்த சரவணன் (23) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai