சுடச்சுட

  

  வட்டாட்சியரின் கையெழுத்தை போலியாக இட்டு ஜாதிச் சான்றிதழ் அளித்த புகாரில், 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  திருநள்ளாறு பகுதி பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி காரைக்கால் தேசியமயமாக்கப்பட்ட வங்கியொன்றில் பகுதிநேர துப்புரவுப் பணிக்கு சேர்ந்துள்ளார். இதற்காக அவர் அளித்த கல்வி மற்றும் ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவை ஆய்வுக்காக திருநள்ளாறு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தபோது, வட்டாட்சியர் கையெழுத்தை போலியாக இட்டிருப்பது தெரியவந்தது.

  இதுகுறித்து வட்டாட்சியர் ராஜகோபால் திருநள்ளாறு காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்தார். திருள்ளாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணையை தொடங்கினர், அங்கு கிராம உதவியாளராகப் பணியாற்றும் அன்பரசனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவரையும், மகேஸ்வரியின் சகோதரர் ராஜசேகரனையும் சனிக்கிழமை கைது செய்தனர்.

  இதுகுறித்து திருநள்ளாறு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அனில்குமார் கூறும்போது, அன்பரசன் அளித்த தகவலின்படி கிராம நிர்வாக அதிகாரி மாறனை விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தலைமறைவான மகேஸ்வரியையும் பிடித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai