சுடச்சுட

    

    மறுவாழ்வு இல்லம் நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

    By திருவாரூர்  |   Published on : 22nd June 2014 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    திருவாரூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. மையத்தை செயல்படுத்த முன்வரும் தொண்டு நிறுவனம் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையங்கள் விதி 2002-ன் கீழ் பதியப் பெற்றிருக்க வேண்டும் அல்லது மன நல சட்டத்தின்படி உரிமம் பெற்றதாக இருக்க வேண்டும்.

    இதுவரை பதிவு பெறாவிடில் ஒரு மாதத்திற்குள் பதிவு பெற வேண்டும். மையத் தைச் செயல்படுத்த போதுமான இடவசதி இருக்க வேண்டும். சொந்த இடம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. மறுவாழ்வு மையத்தில் 50 மனநலம் பாதிக்கப்பட்டோரை வைத்துப் பராமரிக்க வேண்டும்.

    அவர்களை வாரம் 2 முறை மனநல மருத்துவரைக் கொண்டு பரிசோதித்து தேவையான மருத்துவ வசதி அளிக்க வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு முழுப் பரிசோதனை செய்ய வேண்டும். மையத்தில் சமூக பணியாளர் 1, துணை மருத்துவ செவிலியர், மேலாளர் 1, தொழிற்கல்வி ஆசிரியர், வார்டன் மற்றும் சமையலர் உள்ளிட்ட 6 பணியாளர்களை அமர்த்த வேண்டும்.

    இவர்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும். மன நோயாளிகளுக்கு தரமான உணவு, உறைவிடம், நோயாளிகளுக்கு ஆண்டுக்கு 2 செட் உடைகள் போன்ற வசதிகளை இலவசமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதற்கும் அரசு மானியம் வழங்கப்படும்.

    இந்த இல்லத்தை நடத்த விரும்பும் தொண்டு நிறுவனங்கள் ஒரு வாரத்திற்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai