சுடச்சுட

    

    திருவாரூர் அருகே வெள்ளிக்கிழமை வேன் மோதி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

    திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே கிள்ளியூரைச் சேர்ந்தவர் பிரகாஷ்குமார் மகள் பூர்ணிஷா (2). வெள்ளிக்கிழமை இவர் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த வேன் மோதி காயமடைந்த பூர்ணிஷா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இதுகுறித்து பேரளம் போலீஸார் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநர் திருவாரூர் அருகே கோமல் செபஸ்டியார் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (23) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai