சுடச்சுட

  

  காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து நாசமாயின.

  காரைக்கால் டூப்ளக்ஸ் வீதியின் மேற்குப்புற பகுதியில் ஏராளமான வீடுகள் கீற்றுக் கொட்டகை, ஷீட்டுகளால் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் சிறு வணிகர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள்.

  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கிதர்முகம்மது என்பவரது வீட்டில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இதில் ஆஷா ரபீக், அகம்மது நாச்சியாள், அலிமா உம்மாள், அமீர் உள்ளிட்ட 6 பேரின் வீடுகளில் தீ பற்றியது.

  காரைக்கால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

   தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 6 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானது. வீடுகளில் உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் கருகின.

  தகவல் அறிந்து காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொ) பழனிவேலு  சம்பவ இடத்தை பார்வையிட்டார். துணை வட்டாட்சியர் முத்து தலைமையிலான வருவாய்த் துறையினர் சேத மதிóப்பு கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர். சேதம் சுமார் ரூ. 15 லட்சம் வரை இருக்குமென கூறப்படுகிறது. இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai