சுடச்சுட

    

    குடியரசுத் தலைவர் வருகை: முன்னேற்பாட்டு பணிகள் ஆய்வு

    By திருவாரூர்,  |   Published on : 23rd June 2014 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரிலுள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருகையையொட்டி, முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் அண்மையில் ஆய்வு செய்தார்.

    திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆய்வு மையம், வகுப்பறைகள் மற்றும் அலுவலக கட்டடங்களை திறந்து வைக்க ஜூலை 19-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருகை தரவுள்ளார்.

    குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள அரங்கம், ஹெலிகாப்டர் இறங்குதளம், விழா மேடை, அரங்கத்தில் ஒலி, ஒளி அமைப்புகள், விழா அரங்க இருக்கை ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார் ஆகியோர் அண்மையில் மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மத்திய பல்கலைக்கழக நிதி அலுவலர் பி.வி. ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனார்கலி பேகம் ஆகியோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai