Enable Javscript for better performance
அடையாளம் தெரியாதவாகனம் மோதி முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பேரளம் அருகே ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    பேரளம் அருகேயுள்ள செருகுடியைச் சேர்ந்தவர் ரெங்கையன் (70).

    இவர் ஞாயிற்றுக்கிழமை சின்ன செருகுடி நான்குசாலை பகுதியில் சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியது. இதில் ரெங்கையன் பலத்த காயமடைந்தார்.

    திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து பேரளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai