சுடச்சுட

  

  கார் மீது ரயில் மோதல்:ஆசிரியர் தம்பதி உயிர் தப்பினர்

  By திருவாரூர்,  |   Published on : 24th June 2014 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதியது. இதில் ஆசிரியர் தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

  திருவாரூர் - தஞ்சை சாலை பாத்திமா காலனியைச் சேர்ந்தவர் வில்வளவன் (49). இவர் திருத்துறைப்பூண்டி அபிஷேகக் கட்டளை ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி காந்திமதி (46). வேலங்குடி தொடக்கப் பள்ளி ஆசிரியர்.

  இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் அருகே தியானபுரத்திலுள்ள நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு காரில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

  தியானபுரத்தில் உள்ள ஆள்இல்லா ரயில் பாதையை கடக்க முயன்றபோது, காரைக்காலிலிருந்து திருவாரூர் வழியாக திருச்சி சென்ற பயணிகள் ரயில் கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வில்வளவன், காந்திமதி தம்பதியினர் உயிர் தப்பினர்.

  இதுகுறித்து திருவாரூர் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் வழக்குப் பதிந்து, அஜாக்கிரதையாக கார் ஓட்டிய வில்வளவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai