சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் எரிவாயு கிணறு: ஜூன் 27-ல் கருத்துக்கேட்பு கூட்டம்

    By திருவாரூர்,  |   Published on : 24th June 2014 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு அபிவிருத்தி கிணறுகள் அமைப்பது குறித்து ஜூன் 27-ம் தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் அடியக்கமங்கலம், நன்னிலம், கூத்தாநல்லூர், பெரியகோவில் கலப்பல் ஆகிய பகுதிகளில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு அபிவிருத்தி கிணறுகள் அமைக்க திட்டமிட்டுள்ளது.

    இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஜூன் 27-ம் தேதி காலை 11 மணி ஆட்சியரகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    கிணறுகள் அமைக்கும் திட்டம் தொடர்பாக சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீது பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களின் கருத்துக்கள் மற்றும் நோக்கங்களை கூட்டத்தில் பங்கேற்று தெரிவிக்கலாம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai