சுடச்சுட

  

  புதிய சேஷ வாகனத்தில் வெங்கடேசப் பெருமாள் வீதியுலா

  By காரைக்கால்,  |   Published on : 24th June 2014 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  : திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கென புதிதாக செய்யப்பட்ட சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

  பக்தர்கள் தாமாக முன்வந்து சேஷ வாகனம், யானை வாகனம் ஆகியவற்றை புதிதாக செய்து கோயிலுக்கு அளித்தனர்.

  இவற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை ஆகம விதிகளின்படி கண் திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து சேஷ வாகனம் வெள்ளோட்டம் நடைபெற்றது.

  இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் வீதியுலா புறப்பாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர், ஆழ்வார்கள் நற்பணி மன்றத்தினர், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai