சுடச்சுட

  

  திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  ஆட்சியரகத்தில் ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 410 பேர் மனு அளித்தனர்.

  கூட்டத்தில் பிற்படுத்தபட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோர் நலத் துறை சார்பில், 16 பெண்களுக்கு தையல் இயந்திரம், 8 பேருக்கு சலவை பெட்டி, 16 பேருக்கு புதிய குடும்ப அட்டை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் 17 பேருக்கு நலத் திட்ட உதவிகள், 2 நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவித்தொகை ஆகியன வழங்கப்பட்டது.

  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai