சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்ற 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலைய போலீஸார் திங்கள்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது கந்தங்குடி சோதனைச் சாவடி அருகே மயிலாடுதுறை தீபக்பிரபு (28), கும்பகோணம் அருகே செட்டிமங்கலம் மகேஷ்வரன் (33), திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த குரு (28), வேலங்குடி சோதனைச் சாவடி அருகே நாடாகுடி வெங்கடேசன் மகன் கேசவன் (23). கோட்டூர் மதுபானக் கடை அருகே ராஜகோபால் மகன் சங்கர் (29), மன்னார்குடி பந்தலடியில் குமார் மகன் சக்திவேல் (22), சுந்தரவிளாகம் மதுபானக் கடை அருகே திருவாரூர் விஜயகுமார் மகன் கபிலன் (25), எரவாஞ்சேரியில் மணவாளநல்லூர் மணி மகன் குணசேகரன் (34) ஆகியோர் அனுமதியின்றி மதுபானம் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.  இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai