சுடச்சுட

  

  ஜப்பானிய மூளைக் காய்ச்சல்: விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

  Published on : 25th June 2014 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டத்தில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன்.

  ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் பேசியது:

  ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோயின் தன்மை, பரவும் விதம், தடுக்க வேண்டிய முறைகள் குறித்து புதன்கிழமை முதல் ஜூன் 27-ம் தேதி வரை விழிப்புணர்வு வாரமாக மாவட்டம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோயைத் தடுப்பதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொது சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் கிராம ஊராட்சி துறைகளின் மூலம் விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

  மேலும், துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், சுவர் விளம்பரங்கள், தெருக்கூத்து மற்றும் நாடகங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai