சுடச்சுட

    

    திருமுறைகள்தான வாழ்வின் நெறிமுறையாக உள்ளன என்றார் நீதிபதி எம். சொக்கலிங்கம். 

    புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் சார்பில் அண்மையில்(ஜூன் 21, 22) நடைபெற்ற பன்னிரு திருமுறை மாநாட்டில் அவர் பேசியது:

    திருமுறைகள் வாழ்வின் நெறிமுறையாக உள்ளன.  திருமுறைகளுக்கு உள்ள ஆற்றலையும், பெரியபுராணத்தின் பெருமையையும் அனைவரும் படிக்க வேண்டும்.  திருமுறைகளை நாளும் ஓதினால் நல்ல பலன்களை காணலாம். இம்மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்துகின்ற திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் குருமுதல்வரான அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவியின் அரும்பணிகளை வாழ்க்கை வரலாற்று நூல் வழியாகப் படித்து பார்த்து மகிழ்ந்தேன். அத்திருப்பணியினை தொடர்ந்து சிறப்புடன் செயலாற்றி வருகின்ற தவத்திரு தயானந்த சந்திரசேகர அடிகளார்  பாராட்டுக்குரியவர். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற மாநாடு நடத்தப்பட வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சீனு. ராமச்சந்திரனுக்கு தொண்டர் திலகம் என்னும் விருதை வழங்கினார்.

    தொடர்ந்து தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தொகுத்த திருமுறைகளில் அருளியல்,கலைகள்,சமுதாயம் என்னும் ஆய்வுக்கட்டுரை நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதல் படியை, திருமுறை மாநாட்டுக் குழுவின் கௌரவத்தலைவர் சீனு சின்னப்பா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, பேராசிரியர் கண. சிற்சபேசன், கம்பன் கழகத் தலைவர் ரெ. ராமையா, மூத்த வழக்குரைஞர் எஸ். மெய்யப்ப செட்டியார், திருவருட்பேரவைத் தலைவர் இரா. சம்பத்குமார், ஏ.எல். சொக்கலிங்கம், கள்ளக்குறிச்சி ஜி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி திருநாவுக்கரசு நாயனார் உழவாரத் திருமடத்தின் அமைப்பாளர் நாச்சியப்பன் தலைமையில் திருமுறை திருவீதி உலா நிகழ்ச்சி தொடங்கியது. சைவ அன்பர்கள் திருமுறைகளை ஓதி வலம் வந்தனர்.

    சீர்வளர்சீர் மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.  மதுரை பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ. சுந்தரம் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஆகியோர் பேசினர். 

    திருமுறை மாநாட்டுக் குழு துணைத் தலைவர், மெ.அ. தனபால் செட்டியார் தலைமையில் நடந்த 2-வது அமர்வில் மாநாட்டுக் குழுவின் ஆலோசகர் பேராசிரியர் டாக்டர். அய்க்கண், முனைவர் சண்முக செல்வகணபதி, ஆய்வறிஞர் தஞ்சாவூர் குடவாயில் பாலசுப்பிரமணியன், அனைத்துலக சைவத்திருமுறை கூட்டமைப்பின் அமைப்பாளர் சிவனடியார் ம.சண்முகானந்தம் மாநாட்டுக் குழு உறுப்பினர் ஜி.எஸ். தனபதி, பொருளாளர் சி. சேதுராமன் ஆகியோர் பேசினர்.

    தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், அமைச்சர் சி. விஜயபாஸ்கர், எம்எல்ஏ  வி.ஆர். கார்த்திக் தொண்டைமான் ஆகியோர் பங்கேற்று பரிசளித்தனர். வாரியார் மன்றத் தலைவர் எஸ். சுப்பையா, மாவட்ட கூட்டுறவு வங்கி துணைத் தலைவர், இரா. ராஜசேகரன், திருமுறை மாநாட்டுக் குழு செயலர் மு. ராமுக்கண்ணு ஆகியோர் வாழ்த்தினர். 

    திருமுறை மாநாட்டுக் குழு துணைத் தலைவர், ரகுபதி சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் வடலூர் தவத்திரு ஊரன் அடிகள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலை. மேனாள் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரி மேனாள் முதல்வர் தெ. முருகசாமி ஆகியோர் பேசினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai