சுடச்சுட

    

    திருவாரூர், நாகை மாவட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

    Published on : 25th June 2014 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர், நாகை மாவட்டத்திலுள்ள மண்பாண்டத் தொழிலாளர்கள் மழைக்கால உதவித்தொகை பெற விவரம் அளித்துப் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி ஆகியோர் தனித்தனியாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்புத் தொகையாக ரூ. 4 ஆயிரம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மண்பாண்டத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு இந்தப் பராமரிப்புத் தொகை கிடைக்கும் வகையில் திட்டத்தை செயல்டுத்த ஜூன் 23-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இதற்காக தொழிலாளர் நலத் துறை, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம், வருவாய்த் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மாவட்டத்தில் கள ஆய்வை மேற்கொள்கின்றனர்.

    கள ஆய்வின் போது, மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களது குடும்ப அட்டை, மண்பாண்டத் தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் அடையாள அட்டை, அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்டத்தினர், நாகை தொழிலாளர் அலுவலர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தை 04365- 220203 என்ற தொலைபேசி எண்ணிலும், 95662 81414 என்ற செல்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். அல்லது கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநரை 98420 52841 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    திருவாரூர் மாவட்டத்தினர், திருவாரூர் தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை 04366- 251210, உதவி இயக்குநரை (கதர் கிராமத் தொழில்கள்) 98420 52841 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai