சுடச்சுட

  

  நீடாமங்கலம் வட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

  நீடாமங்கலம் வட்டம், சோனாப்பேட்டை ஊராட்சி செட்டிசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, பன்னீர்செல்வம், செல்வராஜ் ஆகியோரது குடிசை வீடுகள் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தன. நீடாமங்கலம் தீயணைப்பு நிலையத்தினர் அங்கு சென்று தீயை அணைத்தனர்.

  மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நீடாமங்கலம் வட்டாட்சியர் வி. மதியழகன், ஒன்றியக் குழுத் தலைவர் எம்.ஆர். ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் சோம. ஜெயபாலன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.மேலும், பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினருக்கும் தலா ரூ. 5000 மற்றும் வேட்டி, சேலை

  உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai