சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றியத் தலைவர் வி. பூசாந்திரம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்டத் தலைவர் வி.எஸ். கலியபெருமாள், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் கே. கைலாசம், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் எஸ். நாகூரான், விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினர் பி. ரத்தினம், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் டி. அண்ணாதுரை ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

  திருவாரூர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கோவில் நிலத்தில் சாகுபடி செய்துவரும் குத்தகைதாரர்களுக்கு நிலத்தை சொந்தமாக்க வேண்டும். பாசன வடிகால் வாய்க்கால்களில் தூர்வாரும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். பருத்தியை விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

  குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் அரசு அறிவித்த ஆதார விலையை முழுமையாக உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai