Enable Javscript for better performance
ஒடிஸா தொழிலாளி அடித்துக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒடிஸாவைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடன் பணியாற்றிய ஒடிஸா மாநில தொழிலாளர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு தமிழ்நாடு, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், புதன்கிழமை காலை பல்கலைக்கழக வளாகத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக நன்னிலம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் ஒடிஸாவைச் சேர்ந்த பிரதீப் (25) என்பதும், அவர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

    பிரதீப்வுடன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சக தொழிலாளிகளால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த போலீஸார், அவருடன் பணியாற்றிய ஒடிஸாவைச் சேர்ந்த மற்ற தொழிலாளர்களை காணவில்லை என்றும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து நன்னிலம் போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடிய மற்ற தொழிலாளர்களைத் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai