Enable Javscript for better performance
கல்வி உதவித்தொகை: பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    கல்வி உதவித்தொகை: பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

    By திருவாரூர்  |   Published on : 26th June 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

    முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் கொடுக்க வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai