சுடச்சுட

    

    கொரடாச்சேரி அருகே ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் காயம்

    By திருவாரூர்,  |   Published on : 26th June 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் சின்னகூத்தாநல்லூரை சேர்ந்தவர் சாமிநாதன் (54). இவர் உறவினர்களுடன் ஒரு ஆட்டோவில் திருவாரூரிலிருந்து சின்னகூத்தாநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த மோகன் மகன் குணசேகரன் (29) ஓட்டினார். ஆட்டோ ஓட்டுநர் அதிவேகமாக ஆட்டோவை ஒட்டியதால் ஏட்டாளச்சியாக்குடி என்ற இடத்தில் ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

    இதில் ஆட்டோவில் பயணம் செய்த சாமிநாதன், லட்சுமி (45), கீதா (25), செல்வராணி (45), தீபக்ராஜ் (9) ஆகிய 5 பேரும் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸார் விசாரிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai