சுடச்சுட

  

  செயற்கை கால்பொருத்தும் முகாம்: 46 பேர் தேர்வு

  By காரைக்கால்  |   Published on : 26th June 2014 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்காலில் நடைபெற்ற செயற்கை கால் பொருத்தும் பரிசோதனை முகாமில் 46 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

  காரைக்கால் மற்றும் கோவை ரோட்டரி சங்கம், ஆஸ்திரேலியாவில் உள்ள வைனம் மற்றும் மேன்லி ரோட்டரி சங்கங்கள் இணைந்து, செயற்கை கால் பொருத்த வேண்டிய நபர்களை தேர்வு செய்யும் முகாமை காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடத்தின.

  காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் முகாமை தொடங்கிவைத்தார். விபத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் கால்களை இழந்தவர்கள் 65 பேர் முகாமில் கலந்துகொண்டனர். இதில் 46 பயனாளிகளை வல்லுநர்கள் தேர்வு செய்தனர். இவர்களுக்கான செயற்கை கால் அளவு எடுக்கப்பட்டது. அடுத்த மாதம் காரைக்காலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கப்படுமென முகாமில் தெரிவிக்கப்பட்டது. செயற்கை கால் பொருத்தும் திட்டத் தலைவர் கே.ராகவசாமி, திட்டத்தின் நோக்கம் மற்றும் ரோட்டரி சங்கத்தின் சேவைகளை விளக்கிக் கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai