சுடச்சுட

  

  ரயில் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, திருவாரூரில் புதன்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்ட 72 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  பாஜக தலைமையிலான மத்திய அரசு அண்மையில் பயணிகள் ரயில் கட்டணம் மற்றும் சரக்கு ரயில் கட்டணம், சீசன் பயணச் சீட்டு கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.இந்நிலையில், ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரியும் திருவாரூர் ரயில் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாதர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. எர்ணாகுளத்திலிருந்து திருவாரூர் வழியாக காரைக்கால் செல்லும், எர்ணாகுளம் விரைவு ரயில் திருவாரூர் ரயில் நிலையத்துக்கு காலை 10.10 மணிக்கு வந்தது. அப்போது போராட்டக்காரர்கள் ரயிலை மறித்து, ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் திட்டங்களை செயல்படுத்தும் பாஜக அரசை கண்டித்தும் முழுக்கம் எழுப்பப்பட்டது. இதையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் கலைமணி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற இந்திய வாலிபர் சங்க மாவட்டச் செயலர் தமிழ்ச்செல்வன் மற்றும் 9 பெண்கள் உள்ளிட்ட 72 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai