சுடச்சுட

    

    திருவாரூரில் வியாழக்கிழமை சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    திருவாரூர் பழைய ரயில் நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. பேரணியை மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    பேரணியில் மாணவ, மாணவிகள் போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். நேதாஜி சாலை, கீழவீதி, வடக்கு வீதி வரை பேரணி சென்றது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், உதவி ஆணையர் (கலால்) (பொ) ச. மாலா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அசோகன், மாவட்டக் கல்வி அலுவலர் அருள்மணி, திருவாரூர் வட்டாட்சியர் அம்பிகாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai