சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த 10 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

  திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதியில் போலீஸார் சாராய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கந்தங்குடி சோதனைச் சாவடியில் கோயில்கண்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜா (31), சோழம்பேட்டை செல்வம் மகன் கார்த்திக் (26), வேலங்குடி சோதனைச் சாவடி அருகே சோழம்பேட்டை கணேசன் மகன் புகழேந்திரன் (25), நீடாமங்கலம் மதுபானக் கடை அருகே குப்புசாமி (50).

  முத்துப்பேட்டையில் ஜாம்புவானோடை உத்திராபதி (55), கூத்தாநல்லூரில் மன்னார்குடி பெத்தபெருமாள் (36), வெள்ளக்குடியில் முருகதாஸ் (40), கமலாபுரம் மாதாகோயில் அருகே ரமேஷ் (42), கோரையாறு பாலத்தில் சித்தமல்லி வீரமணி (36), குடவாசல் மதுபான கடை அருகே பன்னீர்செல்வம் (60) ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 50 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai