சுடச்சுட

  

  திருவாரூர் மற்றும் மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  பாஜக தலைமையிலான மத்திய அரசு அண்மையில் ரயில் கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவாரூர் ரயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில், கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ். தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்தில், பயணிகள் ரயில் கட்டணம், சரக்குக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

  ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் நகரத் தலைவர் எம். சம்பத், நிர்வாகிகள் செந்தில்பாண்டியன், செல்வதுரை, ராமகிருஷ்ணன், சக்தி செல்வகணபதி உள்பட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பேரணியாக சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  மயிலாடுதுறையில்...

  மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எஸ். ராஜகுமார் தலைமை வகித்தார்.

  நாகை மாவட்டத் தலைவர் எஸ். ஜெயபால், முன்னாள் மாவட்டத் தலைவர் ராம.சிதம்பரம், சேவாதள மாநில தலைவர் திருநாவலர்காந்தி, நகர நிர்வாகி கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கட்சியின் நாகை மாவட்டப் பொதுச் செயலர் பி.ஜி. பத்மநாபன், வர்த்தக அணி மாநில நிர்வாகி போஸ், வட்டாரத் தலைவர்கள் ரெங்கநாதன் (மயிலாடுதுறை),உத்தமன் (குத்தாலம்), ராதாகிருஷ்ணன் (சீர்காழி) ஞானசம்பந்தம் ( கொள்ளிடம்)மற்றும் கட்சித் தொண்டர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai