சுடச்சுட

    

    பேருந்து மோதிஆயுதப்படை காவலர்கள் 5 பேர் காயம்

    By திருவாரூர்,  |   Published on : 28th June 2014 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் ஆயுதப் படை காவலர்கள் 5 பேர் காயமடைந்தனர்.

    திருவாரூர் மாவட்ட ஆயுதப் படையில் காவலர்களாக மகேந்திரன், சதீஷ், சுர்ஜித்குமார், கந்தசாமி மற்றும் சிலம்பரசன் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் காவலர் வாகனத்தில் வியாழக்கிழமை பேரளம் அருகே மேனாங்குடி பேருந்து நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு விரைவுப் பேருந்து காவலர்கள் சென்ற வாகனம் மீது மோதியது. இதில் ஆயுதப்படைக் காவலர்கள் 5 பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து பேரளம் காவல் நிலைய போலீஸார் அரசுப் பேருந்து ஓட்டுநர் செந்தில் (35) என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai