சுடச்சுட

    

    இருசக்கர வாகனம்மின் கம்பத்தில்மோதியதில் இளைஞர் சாவு

    By திருவாரூர்,  |   Published on : 29th June 2014 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வைப்பூர் அருகே இருசக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதியதில் அதில் பயணித்த இளைஞர் உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம் கடற்கரை சாலையைச் சேர்ந்த அருமைநாதன் மகன் ஆரோக்கியராஜ் (24). இவர் வெள்ளிக்கிழமை நாகப்பட்டினம் - வைப்பூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    வைப்பூர் காவல் நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக, மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இதுகுறித்து வைப்பூர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai