Enable Javscript for better performance
தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பரிசு- Dinamani

சுடச்சுட

    

    தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பரிசு

    By திருவாரூர்  |   Published on : 29th June 2014 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் அருகே வாழச்சேரியில் செயல்படும் மதர் இந்தியா மேல்நிலைப் பள்ளியில் 2013-14-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு தங்கம் பரிசு வழங்கப்பட்டது.

    முதலிடம் பெற்ற சகீனாபர்வீனுக்கு 4 கிராம் தங்கம், 2-மிடம் பெற்ற அப்ரோஜ்பானுவுக்கு 3 கிராம் தங்கம், 3-மிடம் பெற்ற நுஸ்ரத்ருகையாவுக்கு 2 கிராம் தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. 4, 5-மிடம் மற்றும் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    விஆர்என். துரைராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தாளாளர் விஆர்என். பன்னீர்செல்வம், அத்திக்கடை ஜமாத் செயலர் அப்துல் முஹமது, பொதக்குடி மதரசா வளர்ச்சிக் குழு செயலர்கள் முகமதுயூனுஸ், அப்துல்வாஹீப், பள்ளித் தலைமையாசிரியர் எம். சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai