சுடச்சுட

    

    நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண முடிவு

    By திருவாரூர்,  |   Published on : 29th June 2014 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்ட நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற காவல்துறை மற்றும் நீதித் துறையினருக்கான கலந்தாய்க் கூட்டத்தில் வழக்குகளை விரைந்து முடிக்க தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிப்பது, காவல்துறையினருக்கும் நீதித் துறையினருக்கும் இடையேயான நட்புறவை மேம்படுத்துவது, எதிரிகளை நீதிமன்ற காவலில் வைப்பது, சாட்சிகளை முன்னிலைப்படுத்துவது, உண்மையான குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்குவது மற்றும் மோட்டார் வாகன வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜாஹீர் உசேன், குற்றவியல் நடுவர் நீதிபதி பாலசுப்பிரமணியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனார்கலிபேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai